Categories
மாநில செய்திகள்

வீடு வாடகைக்கு விட்டுள்ளீர்களா….? உடனே இதை செய்யணும்…. காவல்துறை உத்தரவு…!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பற்றி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வாடகை கொடுத்தவர்கள் காவல்நிலையங்களுக்கு தகவல் தர வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளி மாநிலத்தவர்களும், 96 வெளிநாட்டவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பெருகி வரும் இந்த குற்றங்களை தடுக்க, வாடகைக்கு குடியிருக்கும் வெளிமாநிலத்தவர் ஆதார் விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவரங்களை காவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்வர் என்றும் கூறப்படுகிறது. வட மாநிலத்தவர் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Categories

Tech |