Categories
மாநில செய்திகள்

“எய்ட்ஸ் இருந்தா என்ன, அன்புதானே எல்லாம்”….. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தோற்றினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை களைந்து எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த சமூகத்தில் எவ்வித பாகுபாடும் ஒதுக்கதலும் இன்றி தகுந்த மரியாதைடனும் மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அனைவரையும் வேண்டுகோளுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களையும் பாகுபாடு இல்லாமல் அரவணைக்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. விழிப்புணர்வு கொடுக்கும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |