திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேனன்கோட்டை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் ஒட்டன்சத்திரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சீத்தமரம் நால்ரோடு அருகே ராட்சத குழாயில் பொருத்தப்பட்டிருந்த வாழ்வு உடைந்ததால் தண்ணீர் தென்னை மர உயரத்திற்கு பீய்ச்சியடித்ததோடு, பல லட்சம் லிட்டர் வீணானது.
இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் புதிதாக வால்வு பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த குழாயில் தண்ணீர் செல்வதும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது, புதிதாக வால்வு பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே பணி முடியும் வரை ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படாது என கூறியுள்ளனர்.