மத்திய அரசின் நிறுவனமான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் அதன் 65 ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு அதன் நுகர்வோருக்கு சிறப்பு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக வாட்ஸ் அப்பில் இணையதள URL ஒன்று பகிரப்பட்டு வருகிறது. IOC இன்அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்படும். இந்திய ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்ற பெயரில் வெளியான செய்தியில் உண்மை எதுவும் இல்லை. இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷன் 1959 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி நிறுவப்பட்டது. அதன் 65 ஆவது ஆண்டு விழா 2024 ஆம் ஆண்டு கொண்டாடப்படும், 65 ஆவது ஆண்டு கொண்டாட்டம் தவறு என கூறுகிறது.
மேலும் இந்த இணையதளத்தை போல ஆள்மாராட்டம் செய்யும் இணையதள பக்கத்தின் மூலம் மக்களை குறிவைத்து ஏமாற்றப்படுகிறது. இப்படி வெளியாகும் தவறான இணையதள பக்கங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் இது போன்ற செய்திகள் பரப்பப்பட்டன. பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவும் அந்த நேரத்தில் அத்தகைய இணைப்புகள் மோசடியானவை என்று ஒரு தெளிவுபடுத்தலுடன் அறிக்கைகளை வெளியிட்டது. எனவே இது போன்ற போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.