Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க ATM கார்டு தொலைஞ்சுட்டா…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

SBI வங்கி தன் வாடிக்கையாளர் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் SBIன் பயனாளர்களாக இருந்து, ATM கார்டு தொலைந்து போனாலோ (அ) தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, இதை தடுப்பதற்கு கார்டை உடனே பிளாக் செய்ய வேண்டும். ஆன்லைன் வங்கி செயல்முறை வாயிலாக பயனாளர்கள் விரைவாகவும், எளிதாகவும் கார்டை முடக்கலாம். அதுகுறித்த முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.

SBI ஏடிஎம் கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி?

# SBIன் onlinesbi.com எனும் இணையதளத்துக்கு செல்லவேண்டும்.

# பின் “Lock & Unlock User” விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.

# ஆன்லைன் வங்கிக்கான உங்களது பயனாளர் பெயர், கணக்கு எண் மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகிய தகவல்களை உள்ளிடவேண்டும்.

# கீழ் தோன்றும் மெனுவில் இருந்து “பயனர் அணுகலைப் பூட்டு” விருப்பத்தைத் தேர்வு செய்யவேண்டும்.

# விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்தபின், உறுதிப்படுத்த சரி என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.

# உங்களது பதிவு செய்யப்பட்ட மின்அஞ்சல் முகவரி (அ) மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் .

# இணைய வங்கியினுடைய அணுகலை லாக் செய்வதற்கு, ஓடிபி எண்ணை  உள்ளிடவேண்டும்.

# அதன்பின் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ததும், உங்கள் டெபிட் கார்டு வெற்றிகரமாக பிளாக் செய்யப்பட்டதாக அடுத்த பக்கத்தில் ஒரு செய்தியைக் காண்பீர்கள்.

Categories

Tech |