ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் என்னும் இடத்தில், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கவஜ்போரா ரேபான் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும், அங்கு பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இன்னும் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் தீவிரமடைந்துள்ளனர்.