நாடு முழுவதும் கடந்த மாதம் 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 5G சேவைகள் விரிவடைவதை கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அதிர்வெண் கொண்ட 5G சேவைகளை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டி ஜி சி ஓ வின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 3.3-3.6 GHz திறன் கொண்ட 5G நெட்வொர்க் சேவைகளை விமான நிலையங்களில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு வரை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.