Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ருத்ர தாண்டவம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் 5ஆம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு வரும். இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும். தென்கிழக்கு வங்க கடலில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |