Categories
தேசிய செய்திகள்

பீகார் முன்னாள் முதல் மந்திரிக்கு… சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…. தேஜஸ்வி வெளியிட்ட தகவல்…!!!!

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் பீகாரின் முதல் மந்திரி லாலு பிரசாந்த் யாதவ்விற்கு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தைக்கு சிறுநீரகம் வழங்க அவரது மகள் தானாக முன்வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகனும் மாநில துணை முதல் மந்திரிமான தேஜஸ்வி நேற்று குரானி  சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது லாலு பிரசாந்த் யாதவிற்கு வருகிற 5-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறியுள்ளார்.

மேலும் லாலுஜி இங்கு உங்களை பார்க்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் தற்போது சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக இருந்து வருகிறார். தன்னுடைய இந்த உடல்நல குறைவிற்கு பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியல் தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் எனவும் பா.ஜ.கவை தோற்கடிக்க உங்களிடம் கூறுமாறு என்னிடம் அவர் கேட்டுக் கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |