Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி முட்டாள்தனம்… வருமானம் கொறஞ்சி போன எரிச்சல்… டெஸ்லா நிறுவனரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனம்  என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk) கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது.

Image result for The coronavirus panic is dumb

பெரும் தலைவலியாக இருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகின்றது.உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க், கொரோனா வைரஸ் பீதி முட்டாள்தனமானது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Image result for The coronavirus panic is dumb

இதனை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ஏழைகளின் துயரம் பணக்காரர்களுக்கு முட்டாள்தனமாகத்தான் தெரியும், பில்லியனராக இருந்து கொண்டு இப்படி சொல்வது மிகவும் எளிது என்று ஆதங்கத்துடன் பதிவிட்டார். மேலும் பலர், கம்பெனி வருமானத்தை கொரோனா வைரஸ் பாதித்து விட்டதால் எரிச்சலில் எலோன் மஸ்க் இப்படி கூறுகிறார் என கண்டித்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |