தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’96’. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் இணைந்து முதன்முறையாக நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் திரிஷா வேடத்தில் பள்ளி பருவத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இவர் தன் சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது அரைகுறை ஆடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஆளே அடையாளம் தெரியல, நம்ம கௌரியா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CllAr9xvKiS/