தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகி, பிறகு பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை மீனா இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்குமார் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடிகை மீனா நடித்திருக்கிறார். இவர் சென்ற 2009ம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். இந்நிலையில் சென்ற ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இதனால் வேதனையிலிருந்து படிப்படியாக மீண்ட மீனா, இப்போது படப்பிடிப்புகளிலும் விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். இதனையடுத்து மீனாவை 2வது திருமணத்துக்கு குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியது. அதாவது, மகள் நைனிகாவின் எதிர்காலத்தை கருதி நெருங்கிய உறவினர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது இதற்கு மீனா சம்மதித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் மறுமணத்துக்கு ஒப்புக்கொள்ளாத மீனா குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வற்புறுத்தல் காரணமாக 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர் வற்புறுத்தல் காரணமாக நடிகை மீனா சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது மீனா தரப்பு விளக்கமளித்தால் மட்டுமே உறுதியாகும். அதே சமயத்தில் மீனா மறுமணம் செய்துகொண்டால் நல்லது தான் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.