ஆப்கானிஸ்தான் நாட்டில் மதரசா பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு வெடிகுண்டு தாக்குதல்களும் வன்முறை சம்பவங்களும், வழக்கமானதாக மாறிவிட்டன. இந்நிலையில், அந்நாட்டில் வடக்கு சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில் இருக்கும் மதரசா பள்ளியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மாணவர்கள் 16 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பினர் எவரும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பயம் இல்லாமல் பள்ளிக்கு செல்வதற்கு உரிமை இருக்கிறது என்றும் அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது.