Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறவாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும்  8-ம் தேதி தமிழகம் மற்றும்  புதுவை கடலோர பகுதிகளின் அருகே நிலவக்கூடும்.

இந்த கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்  கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் நான்காம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும். அதனால் மேலே கூறப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |