சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி, இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் ”எதிர்நீச்சல்”. இந்த சீரியல் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இருப்பதால் பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையாக பேசியுள்ளார். அதன்படி, திருச்செல்வத்தின் நண்பர் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் திருச்செல்வம் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ”எதிர்நீச்சல் சீரியல் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், எனது குடும்பத்தினர் தொடர்ந்து இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்” எனவும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதை இயக்குனர் திருச்செல்வம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.