Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மத்திய அரசு பணியாளர்களுக்கு இப்படியான ஒரு அறிவுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறையிலும் பயோ மெட்ரிக்முறையை பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.

மேலும் ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விட உள்ளதால் விரைந்து பாடங்களை முடிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2, பிளஸ் 1-க்கு மார்ச் 4ல் பொதுத் தேர்வுகள் தொடங்கின. பத்தாம் வகுப்புக்கு வரும் 27-ல் தேர்வு தொடங்க உள்ளது. இந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 13ல் முடிவுக்கு வருகின்றன. இதற்கிடையே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1 முதல் 20ம் தேதிக்குள் விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

எனவே பாடங்களை விரைந்து நடத்தி மாவட்ட அளவில் நடத்தப்படும் மூன்றாம் பருவத் தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ஏப்.30 வரை பள்ளிக்கு வர வேண்டும். மே மாத இறுதியில் பள்ளி வகுப்பறை , பள்ளி வளாகம் துாய்மையாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும் பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |