மழை காரணமாக சேதமடைந்த பயிருக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததால் விவசாயிகள் நெற்பயிருக்கு தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரெட்டி பள்ளியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அதற்கு அவர் 4000 செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும் பனியாலும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது. இது பற்றி வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திலும் விவசாயிகள் தெரிவித்து ஒரு மாதமாக அலைந்திருக்கின்றார்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் வேளாண் துறையின் கவனத்தை ஈர்ப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களை தீ வைத்து எரித்தார்கள். பின் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி காப்பீட்டுத் தொகை பெற்று தருவதாக கூறினார்கள். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.