சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கியும் , தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வழித்தடம் என் இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படுகிறது. தேனாம்பேட்டையில் இருந்து சின்னமலை இடையே செல்லும் மெட்ரோ ரயில் பாதையில்சரியாக மூன்று மணியளவில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக தெரிகின்றது. இதனால் தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பயணிகள் யாருமே ஒரு ரயிலில் பயணம் செய்து விமான நிலையத்தை அடைய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.சுமார் 20 நிமிடத்திற்கும் அதிகமாக அவர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் காத்திருக்கும் சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது. மெட்ரோ ரயில் ஊழியர்கள் தற்போது அறுந்து விழுந்த உயர் மின் கம்பியை சரி செய்யும் பணியை ஈடுபட்டிருக்கிறார்கள்.