தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் நல்லது கெட்டது இருப்பது போன்று சினிமாவிலும் இருக்கிறது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் எல்லோரும் சினிமாவை விட்டு ஓடுவது கிடையாது. அடுத்த படத்தின் வெற்றியை நோக்கி முன்னேற தான் செய்வார்கள்.
எனக்கு சிறு வயது முதலே இயக்குனர் மணிரத்தினத்தை மிகவும் பிடிக்கும். இயக்குனர் மணிரத்தினத்தினால்தான் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையே வந்தது. நான் சினிமாவில் பல்வேறு விதமான அவமானங்களை சந்தித்துள்ளேன். என் அம்மா முன்பு அழுதால் வேதனைப்படுவார் என்று பாத்ரூமில் கதவை பூட்டிக் கொண்டு அழுவேன். என்னுடைய 2-வது படம் ரிலீஸ் ஆன பிறகு தான் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்திற்கு பிறகு தான் மணிரத்தினமும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும் உனக்குள் ஏதோ மேஜிக் இருக்கிறது என்று நடிகர் அமிதாப் பச்சன் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.