Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு… மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்… எந்த வழித்தடத்தில் தெரியுமா..??

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வாக ஆறாம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகின்றது. இதை காண்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னை, மயிலாடுதுறை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சிறப்பு ரயிலானது 6-ம் தேதி காலை 8.40 மணியளவில் தாம்பரத்திலிருந்து கிளம்பி விழுப்புரம் வழியாக பகல் 12.15 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகின்றது. இதன் பின் மறுமார்க்கமாக பிற்பகல் 1:45 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக தாம்பரத்தை அடைகின்றது. இந்த சிறப்பு ரயில் இதே வழிதடத்தில் 7-ம் தேதியும் இயக்கப்பட இருக்கின்றது. இந்த தகவலை ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |