இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை, போரூர் பகுதியை சேர்ந்த பாரதி அப்பகுதியை சேர்ந்த 6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாரதி மீதான குற்றம் நிரூபிக்கபட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம், 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.