தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக கட்சியை சேர்ந்த சைதை சாதிக் நடிகைகள் குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறினார்.
இது தொடர்பாக சைதை சாதிக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நடிகைகளை பற்றி இனி அவதூறாக பேசமாட்டேன் எனவும், அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி சைதை சாதிக் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை குஷ்பூ தற்போது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இதுவரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும் என்னுடைய தோழிகளையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும். கோழை. அவர் ஒருபோதும் அதை செய்ய மாட்டார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை குஷ்புவின் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.