Categories
உலக செய்திகள்

ரூ 1,85,00,000 மதிப்பு… வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்!

கொலம்பியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அமேசானாஸ் (Amazonas) விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.உடனே அட்டைப் பெட்டியை அவர்கள் திறந்த பார்த்த போது, உயிருள்ள நிலையிலும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட இந்த ஆமை குஞ்சுகளின் மதிப்பு, 1 கோடியே 85 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |