விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை எனக் கூறி கமல்ஹாசன் கடுமையான கோபத்துடன் கூறிய நிலையில் இந்த வாரம் போட்டி ஓரளவுக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அதே சமயம் ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் கதிரவன், ஜனனி, ரக்ஷிதா, தனலட்சுமி, குயின் சி மற்றும் மைனா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் குறைந்த வாக்குகளை பெற்ற மைனா மற்றும் குயின்சி வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.