Categories
தேசிய செய்திகள்

“2 மாதங்களுக்குள் 4 விபத்து”… மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்…!!!!!

காந்திநகர் – மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கபட்ட பின் ஏற்படும் 4-வது சம்பவம் இதுவாகும். இது குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது, குஜராத்தின் உத்வாடா மற்றும் வாவி இடையே லெவல் கிராசிங் கேட் எண் 87 -க்கு அருகே நேற்று மாலை 6:23 மணியளவில் மாடு மீது ரயில் மோதியது. இந்த சம்பவத்தால் ரயிலின் முன் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான சேதம்  இரவு சரி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். பின்னர் மாலை 6.35 மணிக்கு ரயில் மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது.

Categories

Tech |