தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இன்று ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்குமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு விவகாரத்தில் மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு பதிவாளர் புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் ஆதார் எண்ணை இணைக்கச் சொன்னால் மட்டும் போதும். ரேஷன் அட்டைதாரர்களிடம் வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.