Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : ”அதிபர் பதவியேற்பில் குண்டுவெடிப்பு” ஆப்கானில் பதற்றம் …!!

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று தலிபான்கள் எச்சரித்தனர்.ஆனாலும் தலிபான்களின் எச்சரிக்கையை மீறி சுமார் 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தேர்தலில் வாக்களித்தனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு மூன்று மாதங்களுக்கு பின்பு கடந்த  18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி50.64 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவரின் பதவியேற்பு விழா இன்று காபூலில் நடைபெற்றது. அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கும் போது குண்டுவெடிப்பு நடந்தது அங்கே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் பதவியேற்றுக் கொண்டு இருக்கும் போது அங்கு அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தது பொதுமக்களை பீதி அடையவைத்துள்ளது.

Categories

Tech |