இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் இருந்தபோது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார். அதன் பிறகு ஊழல், பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அதாவது கடந்த 1994-ம் ஆண்டு ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பாக ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த நம்பி நாராயணனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
இந்நிலையில் இஸ்ரோ உளவு விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ் உட்பட 4 பேருக்கு கேரள நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. இந்த முன் ஜாமீனை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்த போது கேரள நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பிறகு 4 பேருக்கும் முன் ஜாமீனை ரத்து செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் 4 பேருக்கும் வழங்கப்பட்ட முன் ஜாமீனை 4 வார காலத்திற்குள் மீண்டும் கேரள நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.