தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் மேலபுரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவரின் ஒப்பாரி பாடல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 1.43 நிமிடம் வரை இந்த ஒப்பாரி பாடலில் பாடும் மாணவன் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த பாடல் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
கண்கலங்கவைத்த அரசுப் பள்ளி மாணவரின் 'ஒப்பாரி பாடல்'#TNGovtSchoolsKalaiThiruvizha #Students #Education #Teachers #GovtSchools #TNSED #TNGovtSchools #TNEducation #Trending #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh pic.twitter.com/rYn8kUPznV
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) December 2, 2022