Categories
தேசிய செய்திகள்

பவுன்ஸ் செக்: ஏமாற்றிய அண்ணன்… வழக்கு தொடுத்த தங்கை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

 உத்தரகாண்ட் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த்சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தேவிபுரா பகுதியில் வசித்து வரக்கூடிய நிர்மலா என்பவரிடம், அவரது மூத்த சகோதரரான பல்வந்த்சிங் கடந்த 2018-ம் வருடம் தன் மகனின் திருமண செலவுக்காக ரூபாய்.6 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூபாய். 6 லட்சத்துக்குரிய காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார்.

அதன்பின் அந்த காசோலையை 2019-ம் வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி நிர்மலா அலகாபாத் வங்கிக்கிளையில் பணப் பரிமாற்றத்திற்காக எடுத்துச் சென்றார். அப்போது இந்த காசோலை பவுன்ஸாகி விட்டதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக மீண்டும் பல்வந்த் சிங்கிடம் வேறு காசோலையை நிர்மலா கேட்டு உள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால் காஷிபூர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிர்மலா வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல்வந்த்சிங் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியாகி விட்டது. எனவே ரூ.6 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் திருப்பி தர வேண்டும். மேலும் 4 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். இத்தொகையை கொடுக்க தவறினால் மேலும் 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |