தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார்.
ஆனால் காலதாமதம் காரணமாக நுரையீரல் கடக்காமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மீனா தன்னுடைய கணவர் இறந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். அண்மையில் கூட தன்னுடைய உடலை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும், தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரையே திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
தற்போது இதுகுறித்து நடிகை மீனா விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதாவது என்னுடைய கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை. அதற்குள் இது பற்றி எல்லாம் பேசுவது சரியா? நான் இப்பொழுது கதைகளை தேர்வு செய்து வருவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார். அதனால் இதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மீனாவின் நெருங்கிய நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.