Categories
ஆன்மிகம் இந்து

“எதிரிகளை புன்னகையோடு வெல்லுங்கள்” – ஸ்ரீ கிருஷ்ணர்..!!

நம் வாழ்வில் வரும் எதிரிகளை புன்னகையோடு வெல்லலாம்.. என்று உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர்..!!

ஒரு சமயம் கிருஷ்ணர் அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர். நடு இரவாகிவிட்டது, மூவரும் ஓரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேர தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும், முடிவு செய்தனர்.

அதன் படி ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமனும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தார். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அசையும் தூக்கிய பற்களும், முட்டை கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும், கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.

அதை கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதை தடுத்தான். அப்பொழுது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொள்ளப் போவதாகவும், அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டுமென்றும் கேட்டது. அதைக்கேட்டு அர்ஜுனன் கோபம் மிகவும் கொண்டு அந்த உருவத்தை தாக்கினான். கோபம் அதிகமாக, அதிகமாக அவற்றின் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட, ஒரு பூதாகரமாகி விளங்கிய அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமனை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியது போல பலராமனிடமும் கூறியது. அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பலராமன் அதனுடன் சண்டையிட்டான். அவ்வுருவம் அடிபணிவது இல்லை.

பலராமரின் கோபம் அதிகமாக, அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாக தாக்கி விட்டு அது  மறைந்து விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்கவும், பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு,தூங்க சென்றார். அப்பொழுதும் அந்த உருவம் தோன்றியது.

அதை பார்த்த கிருஷ்ணர் கடகடவென சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் என்றது அவ்வுருவம், உனது தூக்கிய பற்களும், அழகான முட்டை கண்களையும்  கண்டுதான் என்றார். சிரிப்பை அடக்க முடியாமல் அவர் சிரிக்க, தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றம் இல்லாமல்  சண்டை போட்டார்.

கிருஷ்ணர் சிரிக்க, சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அதை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.

இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியது அவ்வுருவம் வளர்ந்து. வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினார். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்துவைத்திருக்கும் புழுவை காட்டினார். நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இதுதான்.

நீங்கள் அதனுடன் சண்டை போடும் பொழுது கடுமையாகக் கோபப்பட்டிர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க, அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும், வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி, விலகி இருந்து விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தை குறைப்பவனே ஞானி என்றான் ஸ்ரீகிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்.

Categories

Tech |