Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவற்றை அருந்தினால் கோடையில் ஏற்படும் பல நோய்களை தடுக்கலாம்..!!

பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி  அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம்.

காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை.

இன்னும் சொல்லப்போனால் காஃபி என்ற பெயரில் நாம் சாப்பிடுவது விஷம் என்று சொல்லவேண்டும். அதே சமயத்தில் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் உடல் சூடு சம்பந்தமான பிரச்சினைகள் மஞ்சள் காமாலை, அம்மை நோய், சிறுநீர் தொடர்பான நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இதேபோல் மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். முக்கியமாக கோடையில் நாம் அருந்தும் காபி இந்த பிரச்சனைகளை அதிகப்படுத்துமே தவிர, குறைக்காது. அந்தவகையில் கோடைகாலத்தில் காபி, டீக்கு பதிலாக காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய மூன்று இயற்கை பானங்களை பற்றி பார்க்கப்போகிறோம்.

1. வெந்தயத் தண்ணீர்:

நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ள வெந்தயத்தை, முதல் நாள் இரவு தூங்க செல்லும் முன்பு ஒரு ஸ்பூன் அளவு சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத்யும், அந்த தண்ணீரையும் எடுத்து குடித்து விட வேண்டும்.

,இவ்வாறு தினமும் செய்து வந்தால் உடல்சூடு சம்பந்தமான எந்த நோயும் நெருங்காது. கண் எரிச்சல், நீர் குத்தல் போன்ற எதுவும் இல்லாமல், அன்றைய நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமல்ல வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மற்றும் இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இதய நோய்கள் வர வாய்ப்பு இல்லை.

மேலும் வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல மருந்தாகும். அதேபோன்று இதில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்பொழுது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. செரிமான பிரச்சனைகள் அல்சர் போன்றவையும் நீங்கும்.

அதுபோல  வெந்தயம் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.  அதேபோன்று வேண்டிய அளவுக்கு வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொண்டு தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

2. கற்றாழை ஜூஸ்:

சோற்றுக் கற்றாழையின் ஜெல் பகுதியை எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து தேன் சேர்த்து நன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம். கோடைக்கு ஏற்ற சிறந்த பானம் இது. உடல் சூடு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் கோடைகால நோய்களை வராமல் தடுக்கக்கூடியது.

மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தரும். அதுமட்டுமல்ல உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பது நல்லது. அதாவது கற்றாழை ஜூஸ் இல் உள்ள சேர்மங்கள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை முழுமையாக வெளியேற்றி விடும்.

இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு வயிற்றுவலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும். அதேபோன்று ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை அடைய செய்வதோடு, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக வைத்துக்கொள்ள முடியும். அதே போன்று உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் கற்றலை ஜூஸ் தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் குறைக்கப்பட்டு  உடல் எடை குறைய ஆரம்பித்து விடும்.

மேலும் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக உடலில் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை இதற்கு உண்டு.

3. எலுமிச்சை சாறு:

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் இன்னும் நல்லது. எலுமிச்சையில் விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக இருப்பதால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ் என்பது அத்துடன் தேன் சேர்ப்பதால் அவை சருமத்தை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும். எலுமிச்சையில் விட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் எலுமிச்சையில் உள்ள பெக்டின்  என்ற நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. நொறுக்குத்தீனிகளின் மீது நாட்டம் செல்லாது.

இதனால் உடல் எடை குறையும், சிறுநீர்த் தொற்று வராமல் தடுக்கும். நுரையீரல் தொற்றுகளை குறைக்கும். இந்த காலம் முதலே புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழமான எலுமிச்சை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

அதேபோன்று அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்கள் மது, சிகரெட் போன்ற பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு கல்லீரல் அதிகமாக வேலை செய்வதோடு அந்த உறுப்பை அதிக அளவில் நச்சுக்களை சேர்த்து எதிர்காலத்தில் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும்.

இந்த நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கும் அருமையான பானம் இந்த எலுமிச்சை ஜூஸ். முக்கியமாக எலும்புகள் வலிமை பெற்று, எலும்பு தேய்மானம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும். மேலும் சிறுநீரக கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாற்றை காலையில் அருந்தி வர விரைவில் கற்களை நீக்கி அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்.

Categories

Tech |