திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக கணவன் மனைவியை தாக்கிய மாமனார் மருமகன் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பொதுக் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் ஆக மாறி இருந்தது.
இந்நிலையில் கண்ணனும், அவரது மனைவி விஜயாவும் நேற்றையதினம் கிணற்றிலிருந்து நீர் எடுத்து பாய்ச்சு கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த முருகனும், அவரது மருமகனான மணிகண்டனும் சேர்ந்து இருவரிடமும் தகராறு செய்ததுடன் கண்ணன் மற்றும் விஜயா ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கையோடு காவல் நிலையத்திலும் அவர்கள் மீது புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள் முருகன் மற்றும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர். பின் இதுகுறித்து நியாயம் கேட்க மணிகண்டனின் மனைவி அன்புக்கரசி கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை கண்ணன் மற்றும் விஜயா சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்ததாக கூறி அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து அவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கண்ணன் விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட பின் முருகன் மற்றும் மணிகண்டனை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.