திருவள்ளூர் அருகே இளைஞர்கள் இருவர் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியையடுத்த வேம்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரா.இவர் அவரது நண்பர் சுதாகர் உடன் நேற்றையதினம் பொன்னேரி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர்களுடன் இவர்கள் இருவரும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறிற்க்கான காரணம் தெரியவில்லை. இதில், சண்டை முற்றவே அருகில் இருந்த கல்லை எடுத்து வீரா, சுதாகர் ஆகியோர் தலையில் போட்டு அந்த மர்ம கும்பல் தப்பி விட்டது.
இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் கொலை செய்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.