Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

1 கிலோ கோழி கறிக்கு…… 10 முட்டை இலவசம்…… நெல்லையில் அசத்தல் OFFER….!!

திருநெல்வேலி அருகே கொரோனா வைரஸ் வதந்தியால் கோழிக்கறி விலை சரமாரியாக குறைந்ததையடுத்து ஒரு கிலோ கோழிக்கறிக்கு  10 முட்டைகள் இலவசமாக வழங்கியதையடுத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்  அந்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், நாடு முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி தாய்லாந்து, தென் கொரியா என இறுதியில் இந்தியாவையும் வந்தடைந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலம் வைரஸ் பரவுவதாக சில சமூக விஷமிகள் வதந்தி பரப்பி வந்தனர்.

இதனால் பொது மக்கள் அச்சமடைந்து பிராய்லர் கோழி வாங்குவதையே முற்றிலுமாக தடுத்து விட்டனர். இதனால் பிராய்லர் கோழியின் விலை சரமாரியாக குறைந்த  நிலையில்,

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் பிராய்லர் கோழியை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில், நல்ல விலையில் அதாவது ஒரு கிலோ ரூபாய் 130க்கு பிராய்லர் கோழி வாங்கினால் 10 முட்டைகள் இலவசம் என்ற அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கண்டதும் அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இறைச்சி கடைக்கு விரைந்து கோழியுடன் பத்து முட்டைகளை வாங்கி வந்தனர். இதனால் அந்த கடையில் மற்றும் கோழி கறி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Categories

Tech |