தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இயங்கி வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை அதாவது டிசம்பர் 3ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று பள்ளிகள் திங்கட்கிழமை பாடவேலையின் படி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.