இந்தியாவின் மிக ப் பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இன்று முதல் whatsapp சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. காப்பீடு சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை வைத்திருக்கும் எல்ஐசி யில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. lic சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம். உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களையும் whatsapp மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது.
எல்ஐசி வாடிக்கையாளர்கள் இனி ஏஜெண்டுகளுக்கு காத்திருக்க தேவையில்லை மற்றும் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. பழைய மற்றும் புதிய பாலிசி விவரங்கள், பிரீமியம், போனஸ் மற்றும் பிற சேவைகள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க, LIC WhatsApp சேவையை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணுக்கு Hi என்று வாட்ஸ்அப் செய்து அனைத்து தகவலையும் பெறலாம்.
வாட்ஸ்அப் மூலம் கிடைக்கும் சேவைகள்
1. பிரீமியம் நிலுவைத் தொகை
2. போனஸ் குறித்த தகவல்
3. பாலிசி நிலவரம்
4. கடன் தகுதி விவரம்
5. கடன் திருப்பிச் செலுத்தும் விவரம்
6. கடன் வட்டி நிலுவை
7. ப்ரீமியம் செலுத்திய சான்று
8. யுலிப் ஸ்டேட்மென்ட்
9. எல்ஐசி சேவை லிங்க்
10. சேவை விருப்பங்கள்