Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புத்தாண்டுக்கு டபுள் ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

மேலும் இந்த உயர்த்தப்பட்ட அகல விலைப்படி 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்ட அகல விலைப்படி உயர்வை எப்போது என மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம் கடந்த வருட நிலவரத்தை வைத்து பார்க்கும் போது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகலவிலைப்படி உயர்வு இருக்கும் எனவும் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி அகலவிலைப்படி உயர்வு 5 சதவீதம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு 18 மாத அகல விலைப்படி நிலுவைத் தொகையானது வழங்கப்படலாம் எனவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |