தமிழகத்தில் கூட்டுறவு மருந்தகங்களில் குறைவான விலைக்கு தரமான மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரேஷன் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளுக்கு தரமான பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கூட்டுறவு மருந்தகங்களில் மிக குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் தமிழக மக்களுக்கு இது குறித்த விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அரசு மருத்துவமனை செய்பவருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகின்றன. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வோர் கூட்டுறவு மருந்தகங்களில் குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.