கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள டி நர்சிபூர் தாலுகாவில் உள்ள கபேஹுண்டி கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி மேக்னா வீட்டில் இருந்து பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது புலி தாக்கியது. மாணவியை புலி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மாணவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் மாணவியின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு ஒரு லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. மேலும் வீட்டில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்ல கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கிராமத்தில் புலியால் மனிதர்கள் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும்.