திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரில் 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கணவன், மனைவி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து இவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் 51 பவுன் நகை 5 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இதுகுறித்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது திருட்டில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவர அவரை உடனடியாக அதிகாரிகள் வலைவீசித் தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் கைது செய்தனர்.
பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 51 பவுன் நகை 5 லட்சம் பணம் மீட்கப்பட்டது. பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.