Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் புதிய அறிமுகம்…. இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம ஹேப்பி தான்….!!!

இந்தியாவின் ‌ முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள பாளையங்கோட்டை சாலையில் தற்போது அனுபவ மையத்தை திறந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் 10 ஏத்தர் எனர்ஜி சில்லரை விற்பனை ஸ்டோர்கள் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது புதிதாக ஜென் 3 ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 ப்ள்ஸ் போன்ற பிளாக் ஷீப் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் டிரைவ் மற்றும் வாங்குவதற்கு கிடைக்கும்.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனமானது ஆசிர் மையத்துடன் இணைந்து புதிய அனுபவ மையத்தை திறந்துள்ளது. இந்த மையத்தில் நிறுவனத்தில் ஒவ்வொரு புதிய ஸ்கூட்டர்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்ப்பதுடன் முழுமையான அனுபவத்தையும் ஏத்தர் எனர்ஜி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |