Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே கொள்கை!…. எது தெரியுமா?…. எஸ்.பி.வேலுமணி சாடல்…..!!!!

தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி பேசியதாவது “தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்றம் தேர்தலை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் எடப்பாடி தான் முதல்வர் என சவால் விட்டார். மேலும் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை. தைரியம் இருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். இதனிடையில் எப்படி ஆவது உதயநிதியை  அமைச்சராக்க வேண்டும். பின் அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே கொள்கை ஆகும். எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் போது எந்த திட்டம் கொண்டு வந்தாலும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்று பேசினார்.

Categories

Tech |