பிரபல நடிகர் ராகவா லாரன்சின் தம்பி தெலுங்கு படத்தில் நடிக்கும் துணை நடிகை ஒருவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமல்லாமல் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்சின் தம்பியான என்பின் வினோத் தெலுங்கு படத்தில் நடித்து வரும் துணை நடிகை ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதற்கு அந்த நடிகை மறுக்கவே அவரை பல்வேறு விதத்தில் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த அவர் பலமுறை காவல் நிலையத்தை நாடிச்சென்று தன்னை காப்பாற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் காவல்துறை உதவ மறுக்கவே தற்போது தெலுங்கானா முதல்வர் தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.