Categories
தேசிய செய்திகள்

பந்தயத்தில் ஜெயிக்க முத்தமிட்ட மணமகன்…. கடுப்பான மணப்பெண் பரபரப்பு புகார்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் எழுவதாகவும் மணப்பெண் தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து இருவீட்டாரையும் காவலர்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இப்பிரச்னையில் சமரசம் செய்துவைக்க காவல்துறையினர் முயன்ற நிலையில், அந்த பெண் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதனால் திருமணமானது நிறுத்தப்பட்டது. இதனிடையில் திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து விட்டதால் அவர்களுக்கு கிட்டத்தட்ட திருமணம் நிறைவடைந்துவிட்டது என்றே கூறலாம். இதனால் ஓரீரு நாட்களில் சம்பவத்தின் சூடு தணிந்த பிறகு இதுகுறித்து அவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |