திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு சுப்ரமணிய சிவா பேருந்து நிலையத்தில் கொடைரோடு செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வந்த மற்றொரு பேருந்து கொடைரோடு செல்வதற்காக நின்ற அரசு பேருந்து மீது மோதியது.
இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்வதை பார்த்த மாணவிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு ஓடி வந்த ஓட்டுநர் பேருந்தில் ஏறி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். சுமார் 10 அடி தூரத்திற்கு பேருந்து தானாக ஓடியதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது l.