கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை இன்று அமையும். செல்வமும் செல்வாக்கும் உயரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று எடுத்த காரியங்களில் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். இன்று காதலர்களுக்கு ஒரு பொன்னான நாளாகவே அமையும்.
திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல்-வாங்கல் கூட மிகவும் சிறப்பாகவே இருக்கும். தனவரவு இன்று எந்தவித மாற்றங்களும் இல்லாமல் சிறப்பாகவே வந்து சேரும். இன்று செல்வாக்கும், செல்வமும் சேரும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் நல்ல தரதேர்ச்சிகளையும் பெறுவார்கள். அதேபோல தேர்வு முடியும் வரை உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேர்வு முடியும் வரை கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வட மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்