Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..முயற்சிகள் வெற்றி ஆகும்.. உற்சாகம் பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடுகளும் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். இன்று மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை உருவாகும். உற்சாகம் பெருகும், பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகளும் விலகிச்செல்லும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்று  எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். அது மட்டுமில்லை தேர்வு முடியும் வரை உங்களுடைய உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். தேர்வு முடியும் வரை இரவு தூங்குவதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |