துலாம் ராசி அன்பர்களே..! இன்று சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். தடைப்பட்ட பணவரவுகளும் தடையின்றி வந்துசேரும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி செல்லும். உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டியிருக்கும்.
இன்று எதையும் ஒருமுறைக்கு, இருமுறை ஆலோசனை செய்து காரியங்களைச் செய்யுங்கள். அலட்சியம் காட்டாமல் காரியங்களை மேற்கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் முன்னேற்றம் இருக்கும். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கவனமாக பாடங்களைப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். அதேபோல தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுபோல இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்